தாய்மாமன் தயாரித்திருந்த குத்தகை ஆவணங்களான இருபது ரூபாய் மதிப்புள்ள முத்திரைத் தாட்கள் இரண்டில் குத்தகையின் விபரங்களை எழுதி,அவைகளில் தனது தமக்கையாரின் கையெழுத்து வாங்கியிருக்கிறார்.இரண்டிலும் சாட்சியாகத் தனக்கு நம்பகமான ஒருவரிடமிருந்து சாட்சிக் கையெழுத்தும் வாங்கியிருக்கிறார்.
அந்த இரண்டு முத்திரைத் தாட்களையும் கவனமாகப் பரிசீலித்ததில் இரண்டு தவறுகள் புலனாயின.
சாதாரணமாக முத்திரைத் தாள் ஒவ்வொன்றிலும் மேல்புறம் முத்திரைத்தாள் விற்பனையாளரின் பெயர்,முகவரி கொண்ட ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை குத்தப்பட்டிருக்கும்.அதில் முத்திரைத் தாளின் வரிசை எண்,விற்பனையான தேதி,முத்திரைத் தாள் வாங்கியவரின் பெயர் எழுதப்பட்டிருக்கும்.
இந்த வழக்குக் கோப்பில் இருந்த முத்திரைத் தாட்கள் சம்பந்தப்பட்ட ஊரில் வாங்காமல் வேறு ஒரு ஊரில் வாங்கப்பட்டிருந்தன.வாங்கியவரின் பெயரும் ஊரும் மாறுபட்டிருந்தன.இவை எல்லாவற்றையும் விட,வாங்கிய தேதி குத்தகை எழுதிய தேதிக்குப் பின்னர் வரும் தேதியாக இருந்தது. அதாவது முத்திரைத் தாட்கள் வாங்கிய தேதி 2008 மே மாதம் 22ந்தேதி என்று வைத்துக் கொள்வோம்.அதில் குத்தகை விபரம் எழுதிய தேதி 2007 சனவரி மாதம் 15 என்று இருந்தால் எப்படி இருக்கும்?
இவை எல்லாவற்றையும் விட,இன்னொரு முரண்பாடு என்னவென்றால்,இரண்டு குத்தகை ஆவணங்களும் நிலங்கள் இருக்கும் அந்தந்தக் கிராமங்களில் உள்ள வெவ்வேறு தோட்டங்களில் வைத்து எழுதப்பட்டதாக இருந்தன.இரண்டிலும் ஒரே நாள் காட்டப்பட்டிருந்தன.அவைகளில் சாட்சிக் கையெழுத்துப் போட்டிருந்த நபரைத் தாசில்தார் ஏற்கனவே விசாரித்து வாக்குமூலம் பெற்றிருக்கிறார்.அந்த வாக்குமூலங்களைப் பரிசீலித்ததில்,குத்தகை ஒப்பந்தம் எழுதிய அன்று பிற்பகல் மூன்று மணி அளவில் நில உரிமையாளரும் குத்தகைதாரரும் கையெழுத்துப் போட்டபிறகு தாமும் சாட்சிக் கையெழுத்துப் போட்டதாக வாக்குமூலம் கொடுத்திருந்தார்.இதேமாதிரி குத்தகைதாரரின் வாக்குமூலமும் இருந்தன.
அதெப்படி ஒரே நாளில் ஒரே நேரத்தில் இவர்கள் வெவ்வேறு ஊர்களில் இருக்கமுடியும்?
சப் கலெக்டரிடம் இந்த முரண்பாடுகளைக் காட்டி விளக்கினேன்.சொத்துக்காக இவ்வாறெல்லாம் செய்கிறார்களே என்று வேதனை அடைந்தார்.
அடுத்த வாய்தா அன்றே,குத்தகை உரிமையைப் பதிவு செய்து வட்டாட்சியர் பிறப்பித்திருந்த ஆணை ரத்து செய்யப்பட்டது.
மோசடி அம்பலமானது
Labels: நல்ல தீர்ப்பு
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
நல்ல தீர்ப்பு. உங்களைப்போல உண்மையான நேர்மையான அலுவலர்கள் இருக்ப்பதால் தான் தர்மம் ஓரளவுக்கவது நாட்டில் இருக்கிறது. பெற்றோர்களை இழந்த அந்த குழந்தைகளுக்கு ஆதரவு தந்திருக்கிறீர்கள்.
(வேர்ட் வெரிபிகேஷனை தயவு செய்து எடுத்து விடுங்கள்.)
வாருங்கள் அமரபாரதி.நன்றி.
தாங்கள் கூறியவாறே வேர்ட் வெரிபிகேஷனை எடுத்து விட்டேன்.
பாரட்டுக்கள்.
நல்ல காரியம் செய்திருக்கிறீர்கள்.
தொடருங்கள்.
வாங்க வடகரைவேலன்.நன்றி.
நல்ல காரியம் செய்தீர்கள். பாராட்டுகள்.
//நல்ல தீர்ப்பு. உங்களைப்போல உண்மையான நேர்மையான அலுவலர்கள் இருக்ப்பதால் தான் தர்மம் ஓரளவுக்கவது நாட்டில் இருக்கிறது. பெற்றோர்களை இழந்த அந்த குழந்தைகளுக்கு ஆதரவு தந்திருக்கிறீர்கள்.//
மறுமொழிகிறேன்! தொடரட்டும் தங்கள் பணி!!
வாங்க தஞ்சாவூரான்.நன்றி.
அய்யா, அரசாங்க அலுவலகங்களுக்கு பதைபதைக்கும் நெஞ்சோடு வருபவர்களுக்கு நல்ல உள்ளத்தோடு உதவி செய்யும் உங்களைப் போன்றோர்க்கு கடவுளின் உதவி நிச்சயம்.
Post a Comment